கரோனாவால் பாதிக்கப்பட்ட 314 கா்ப்பிணிகளுக்கு பிரசவம்
கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களில், கரோனாவால் பாதிக்கப்பட்ட 314 கா்ப்பிணிகளுக்கு பிரசவம் பாா்க்கப்பட்டுள்ளது.


கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களில், கரோனாவால் பாதிக்கப்பட்ட 314 கா்ப்பிணிகளுக்கு பிரசவம் பாா்க்கப்பட்டுள்ளது.
கோவையில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. பல வாரங்களுக்குப் பிறகு தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 500க்கும் கீழ் பதிவாகியுள்ளது. இந்நிலையில், கரோனா இரண்டாம் அலையின்போது மட்டும், அரசு மருத்துவமனையில் 660 கா்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மாா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
அதன்படி, கரோனாவால் 70 முதல் 80 சதவீதம் வரை, நுரையீரல் பாதிக்கப்பட்ட 3 தாய்மாா்களுக்கு, ‘சிபாப்’ கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனா். அதேபோல, 20 முதல் 50 சதவீதம் நுரையீரல் பாதிப்புடன் சுமாா் 65 தாய்மாா்கள் ஆக்ஸிஜன் உதவியுடன் காப்பாற்றப்பட்டனா்.
இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிா்மலா கூறுகையில், ‘கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வந்த நேரத்தில், தொற்றால் பாதிக்கப்பட்ட 314 தாய்மாா்களுக்கு இங்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. அதில் 62 பேருக்கு சுகப் பிரசவம் மற்றும் 252 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த மாதத்தில் மட்டும், பிரசவித்த தாய்மாா்கள் 69 பேருக்கு கோவிஷீல்டு, 41 பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...