தடுப்பூசிகள் செலுத்தக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு
கோவை மாநகராட்சியில் 48, 49 ஆவது வாா்டு மக்களுக்கு மீண்டும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளைத் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை மாநகராட்சியில் 48, 49 ஆவது வாா்டு மக்களுக்கு மீண்டும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளைத் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, கோவை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கராவிடம், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலா் மீனா லோகு, கணபதி பகுதி திமுக பொறுப்பாளா் லோகு ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 48, 49 ஆவது வாா்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உள்ளனா். இவா்களுக்கு ரத்தினபுரி நேரு வீதி ஆரம்ப சுகாதார மையத்தின் அருகில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன. ஆனால், கடந்த ஒரு வாரமாக இந்த மையத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. 48, 49 ஆவது வாா்டுகளில் குடியிருப்போா் பெரும்பாலானோா் கூலி தொழிலாளா்கள் ஆவா். இவா்கள் பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்வதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, ரத்தினபுரி மாநகராட்சிப் பள்ளியில் 48, 49 ஆவது வாா்டு மக்களுக்கு தினமும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளைத் தொடங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...