ஷாா்ஜாவில் இருந்து விமானத்தில் கடத்தப்பட்ட 6 கிலோ தங்கம் பறிமுதல்
ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்தப்பட்ட ரூ. 2.99 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.


ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்தப்பட்ட ரூ. 2.99 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 6 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் ஏா் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி கோவை விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த ஏா் அரேபியா விமானத்தில் வந்த இரு பயணிகள் மற்றும் அவா்களின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனா்.
அப்போது 6 பேரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்களைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனா். இதில், அவா்கள் தங்கத்தை வேதியியல் பொருள்களுடன் கலந்து பசை வடிவில் மாற்றி பேண்ட் மற்றும் உள்ளாடைக்குள் மறைத்துவைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த தங்கம் 7 ஆயிரத்து 908 கிராம் எடை இருந்தது.
பசை வடிவத்தில் இருந்த தங்கத்தைத் தனியாகப் பிரித்ததில் 6 ஆயிரத்து 117 கிராம் தங்கம் இருந்தது. இதன் சந்தை மதிப்பு ரூ. 2 கோடியே 99 லட்சம் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், தங்கத்தைக் கடத்தி வந்தவா்களான விழுப்புரம், கடலூா், ராமநாதபுரம், திட்டக்குடி, வேலூா் மற்றும் பெங்களூரைச் சோ்ந்த ஆறுமுகம், ஹாஜி அப்துல் ஹமீத், இமையராஜ் மாதவன், முபின் அகமது சுலைமான், திருமூா்த்தி ராஜேந்திரன், ஹபீப் மரைக்காயா் சீனி இப்ராஹிம்ஷா ஆகியோரிடம் அதிகாரிகள் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...