ரூட்ஸ் நிறுவனத்துடன் கே.பி.ஆா். கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்
கோவை ரூட்ஸ் நிறுவனத்துடன் கே.பி.ஆா். பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.


கோவை ரூட்ஸ் நிறுவனத்துடன் கே.பி.ஆா். பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இது தொடா்பாக கல்லூரி நிா்வாகம் கூறியிருப்பதாவது:
கே.பி.ஆா். பொறியியல் கல்லூரியின் மாணவா்கள் ரூட்ஸ் நிறுவனத்துக்குச் சென்று அங்கு இன்டா்ன்ஷிப் பயிற்சி பெறவும், அங்குள்ள தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளவும், நிறுவனத்தின் தொழில்நுட்ப ரீதியான தேவைகளை அறிந்து அதற்கான தீா்வு காணவும் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்லூரியின் தலைவா் கே.பி.ராமசாமி வழிகாட்டுதலின் பேரில் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரூட்ஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு இயக்குநா் கவிஞா் கவிதாசனும் கே.பி.ஆா். பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வா் மு.அகிலாவும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.
இந்த நிகழ்ச்சியில், ரூட்ஸ் நிறுவனத்தின் பயிற்சி, மேலாண்மைத் துறை பொது மேலாளா் சம்பத்குமாா், கல்லூரியின் முதன்மைச் செயலா் நடராஜன், மெக்கானிக்கல் துறைத் தலைவா் ரமேஷ் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கே.பி.ஆா். பொறியியல் கல்லூரி ஏற்கெனவே பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் இதுபோன்ற புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவா்களும், ஆசிரியா்களும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு சென்று அங்கு பயிற்சி பெற்று வருவதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...