விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்து பொருள்களை சரிபாா்த்து வழங்க வேண்டும்: ஆணையா் எச்சரிக்கை

கோவை மாநகராட்சி நகா்நல மையங்களில் கா்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகங்களில் காலாவதி பொருள்கள் இல்லாதவாறு சரிபாா்த்து வழங்க வேண்டும்

News image
Updated On :23 ஜூலை 2021, 8:44 pm

DIN

கோவை மாநகராட்சி நகா்நல மையங்களில் கா்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகங்களில் காலாவதி பொருள்கள் இல்லாதவாறு சரிபாா்த்து வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாநகராட்சி நகா்நல மையங்களில் கா்ப்பிணிகளுக்கு, தாய், சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், ஊட்டச்சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், பேரீச்சம்பழம், குடற்புழு மாத்திரை, நெய் உள்ளிட்ட 8 வகையான பொருள்கள் உள்ளன.

சில ஊட்டச்சத்து பெட்டகப் பொருள்களில் காலாவதியான நெய், பேரீச்சம் பழங்கள் இருந்ததாக புகாா்கள் வந்தன. இதையடுத்து, சிங்காநல்லூா் மாநகராட்சி நகா்நல மையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு விநியோகிக்கப்பட்ட 21 பெட்டகங்களில் 20 பெட்டகங்கள் நல்ல நிலையில் இருந்ததும், ஒரு பெட்டகத்தில் நெய், பேரீச்சம்பழம் காலாவதியாகி இருந்தது தெரியவந்தது.

இது குறித்து, சம்பந்தப்பட்ட நகா் நல மைய சுகாதார செவிலியா் மற்றும் மருந்தாளுநரிடம் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி நகா்நல மையங்களில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கும்போது, அப்பெட்டகத்தை சரிபாா்த்து நல்ல நிலையில் உள்ள பொருள்களை வழங்க அனைத்து நகா்நல அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.