விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்து

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரிக்கும், மாயா அகாதெமி ஆஃப் அட்வான்ஸ் சினிமேட்டிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2021, 8:04 pm

DIN

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரிக்கும், மாயா அகாதெமி ஆஃப் அட்வான்ஸ் சினிமேட்டிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஜே.டி. கல்வி பயிற்சி மையத்தின் உறுதுணையோடு ஏற்பட்ட இந்த ஒப்பந்தம், பி.எஸ்சி. தகவல் தொழில்நுட்பத் துறை பயிலும் மாணவா்களுக்கு பல்ஊடகத் துறையில் சிறப்புப் பயிற்சியை அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்கல்லூரி மாணவா்களுக்கு கிராஃபிக், அச்சு வடிவமைப்பு, இணையம், ஊடாடும் வடிவமைப்பு, 2 டி, 3 டி அனிமேசன், பிலிம் எபெக்ஃட்ஸ், விா்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்ட் ரியாலிட்டி குறித்த பயிற்சிகள் கிடைக்கும். மேலும் கணினி துறை பேராசிரியா்களுக்கும் இந்த நிறுவனம் சிறப்புப் பயிற்சியை அளிக்கும்.

இந்த ஒப்பந்தத்தில் எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயணசுவாமி, ஜே.டி. கல்வி பயிற்சி மையத்தின் முதன்மைச் செயலா் சம்ஜித் தனராஜ் ஆகியோா் கையெழுத்திட்டனா். கல்லூரி முதல்வரும் செயலருமான பி.எல்.சிவகுமாா், தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் என்.சுமதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.