விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஆடிவெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி கோவையில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:31 pm

DIN

ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி கோவையில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி, அம்மன் கோயில்களில் காலை முதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பெண்கள் விரதம் இருந்து கோயிலுக்கு வந்திருந்தனா். கோவை தண்டுமாரியம்மன் கோயிலில் கடந்த வாரம், மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன், இந்த வாரம் காமாட்சியம்மன் அலங்காரத்தில் தோன்றினாா். கோனியம்மன் கோயிலில், அம்மன் தங்கப் பாவாடை அலங்காரத்திலும், பெரியகடைவீதி மாகாளியம்மன் கோயிலில் 500 கிலோ பழங்களால் அலங்கரிக்கப்பட்டு, அம்மன் அன்னபூரணி அலங்காரத்திலும் அருள்பாலித்தனா்.

இதேபோல, காட்டூா் முத்துமாரியம்மன் கோயிலில், அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் காட்சி தந்தாா். அனைத்து கோயில்களிலும் முகக் கவசம் அணிந்த பக்தா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. வாசலில் பக்தா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.