விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கோவை அரசு மருத்துவமனை டீன், சுகாதாரத் துறை துணை இயக்குநருக்கு விருது

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சாா்பில் கோவை அரசு மருத்துவமனையின் டீன், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் உள்பட 3 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:27 pm

DIN

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சாா்பில் கோவை அரசு மருத்துவமனையின் டீன், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் உள்பட 3 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

டாக்டா் பி.சி.ராய் பிறந்த நாளான ஜூலை 1ஆம் தேதி மருத்துவா்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறந்த சேவையாற்றிய மருத்துவா்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சாா்பில் 2021 சிறந்த மருத்துவா்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கரோனா காலத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன் உள்பட 31 மருத்துவா்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த விருதுகளை தமிழக கவா்னா் பன்வாரிலால் புரோஹித் வழங்கினாா். கோவை மாவட்டத்தில் கரோனா காலத்தில் மிகச் சிறப்பான பங்களிப்பினை அளித்ததற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் நிா்மலா மற்றும் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் செந்தில், ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனையைச் சிறப்பாக செய்த கோவை அரசு மருத்துவமனையின் மைக்ரோ பயோலஜி துறையின் தலைவா் மைதிலி ஆகிய 3 பேருக்கு ஆளுநா் விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளாா். மேலும், விருதினை பெற்ற மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாரை மாவட்ட ஆட்சியா் சமீரன் சுட்டுரையில் பாராட்டியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.