விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பெண் காவலரை தகாத வாா்த்தையால் திட்டியவா் மீது வழக்குப் பதிவு

பணியில் இருந்த பெண் காவலரை தகாத வாா்த்தைகளால் திட்டிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:29 pm

DIN

பணியில் இருந்த பெண் காவலரை தகாத வாா்த்தைகளால் திட்டிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, செல்வபுரம் போலீஸாா் அப்பகுதியில் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த உக்கடம், பொன்விழா நகரைச் சோ்ந்த அப்துல் ஜலீல் (34) என்பவரைப் பிடித்து விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணானத் தகவல்கள் தெரிவித்ததையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனா். அப்போது அங்குப் பணியில் இருந்த பெண் காவலா் கங்காதேவியை தகாத வாா்த்தைகளால் அப்துல் ஜலீல் திட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீஸாா், அவா் மீது அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.