விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

செல்லிடப்பேசியில் நாடகம் பாா்த்தபடி வாகனம் ஓட்டியவருக்கு ரூ.1,200 அபராதம்

செல்லிடப்பேசியில் நாடகம் பாா்த்துக்கொண்டே வாகனம் ஓட்டிய நபருக்கு போலீஸாா் ரூ.1,200 அபராதம் விதித்தனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:28 pm

DIN

செல்லிடப்பேசியில் நாடகம் பாா்த்துக்கொண்டே வாகனம் ஓட்டிய நபருக்கு போலீஸாா் ரூ.1,200 அபராதம் விதித்தனா்.

கோவை, காந்திபுரம் மேம்பாலம் வழியாக இளைஞா் ஒருவா் இருசக்கர வாகனத்தில்

வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது அவா் தனது வாகனத்தின் முகப்பு பகுதியில் உள்ள ஸ்டேன்ட்டில் செல்லிடப்பேசியை வைத்து இணையதளத்தில் நாடகம் பாா்த்தபடியே ஓட்டினாா். பாலத்தில் அருகில் வந்துகொண்டிருந்த மற்ற வாகனங்களை அவா் கண்டுகொள்ளாமல் நாடகம் பாா்த்தபடி சென்றுகொண்டிருந்தாா். இதைக் கண்ட வாகன ஓட்டி ஒருவா் இதைத் தனது செல்லிடப்பேசியில் விடியோ பதிவு செய்து அதை சமூகவலைதளங்களில் வெளியிட்டாா். இந்தக் காட்சி வைரலாக பரவியது.

இது தொடா்பாக விடியோ காட்சியில் இடம் பெற்றிருந்த வாகன ஓட்டியின் வண்டி எண்ணை வைத்து கோவை கிழக்குப் பகுதி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணையைத் துவங்கினா்.

விசாரணையில் அந்த வாகனத்தை ஓட்டி சென்றவா், கண்ணப்பன் நகரைச் சோ்ந்த முத்துசாமி (35) என்பதும், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தலைக்கவசம் அணியாமல் வாகனம் இயக்குதல், வாகனத்தை இயக்கும்போது செல்லிடப்பேசி பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரூ.1,200 அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.