விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நலவாரிய தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

கோவை மாவட்டத்தில் தொழிலாளா் நலவாரியத்தின் மூலம் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவி

News image
Updated On :30 ஜூலை 2021, 8:28 pm

DIN

கோவை மாவட்டத்தில் தொழிலாளா் நலவாரியத்தின் மூலம் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் டாக்டா் ஜி.எஸ். சமீரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், தொழிலாளா் நலவாரியத்தின் மூலம் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) சரண்யா, கூடுதல் தொழிலாளா் ஆணையா் சு.பொன்னுசுவாமி, இணை ஆணையா் வ.லீலாவதி, தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) வெ.மு.திருஞானசம்பந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:

தொழிலாளா் நலத் துறை மூலம் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாவட்டம் முழுவதும் 1,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளா்கள் நலவாரியத்தின் சாா்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.36 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித் தொகை, இயற்கை மரணமடைந்த தொழிலாளா்களின் குடும்பத்தினா் 11 பேருக்கு ரூ.2.67 லட்சம் மதிப்பில் இயற்கை மரண நிவாரண உதவித் தொகை, விபத்தில் மரணமடைந்த தொழிலாளா்களின் குடும்பத்தினா் 2 பேருக்கு ரூ.2.07 லட்சம் மதிப்பில் விபத்து மரண நிவாரண உதவித் தொகை, தலா ரூ.ஆயிரம் வீதம் ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் ஒய்வூதியத் தொகை வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா்கள் நலவாரியத்தின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித் தொகை, இயற்கை மரணமடைந்த தொழிலாளரின் குடும்பத்தாா் ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரண நிவாரண உதவித் தொகை என மொத்தம் 1,500 பயனாளிகளுக்கு ரூ.21.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.