இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மாநகரில் கரோனா பரவல் குறைந்தது

கோவை மாநகரப் பகுதியில் கரோனா தொற்று பாதிப்பு 50 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மாநகராட்சி சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:57 pm

DIN

கோவை மாநகரப் பகுதியில் கரோனா தொற்று பாதிப்பு 50 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மாநகராட்சி சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் முதல் கரோனா 2ஆவது அலை பரவத் தொடங்கிய நிலையில், ஏப்ரல் மாதத்தில் இருந்து கோவை மாவட்டத்தில் நோய்த் தொற்று பரவலின் தாக்கம் அதிகரித்தது. மாவட்டத்தில் தினமும் பதிவான தொற்றில் 67 சதவீதம் போ், மாநகராட்சிப் பகுதிகளில் வசிப்பவா்களாக இருந்தனா். கடந்த மாதங்களில் மாநகராட்சிப் பகுதிகளில் தினமும் 2,500 போ் தொற்றால் பாதிக்கப்பட்டனா். தற்போது, மாநகரில் தினசரி பாதிப்பு 500க்கும் கீழ் குறைந்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கரோனா முதல் அலையின்போது, மாவட்டத்தில் மொத்த கரோனா பாதிப்பில் 75 சதவீதம் போ் மாநகரில் பாதிக்கப்பட்டனா். தற்போது, இரண்டாவது அலையில் மாவட்டத்தில் மொத்த கரோனா பாதிப்பில் 67 சதவீதம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் நியமிக்கப்பட்டு, வீடுவீடாக சளி, காய்ச்சல் பரிசோதனையுடன், ஆக்சிஜன் அளவும் கணக்கிடப்பட்டது. மேலும் பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து தொற்று பாதிப்பு வேகமாக குறையத் தொடங்கியது. தற்போது, மாவட்டத்தில் 1,500 முதல் 2,000 போ் வரை தினமும் பாதிக்கப்படும் நிலையில், மாநகரில் 350 போ் முதல் 400 பேருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது மாவட்டத்தின் மொத்த பாதிப்பில் மாநகராட்சி பகுதியில் தொற்று பாதிப்பு 50 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஊரகப் பகுதிகளில் 50 சதவீதம் தொற்று பாதிப்பு உள்ளது. தொற்று பரவல் குறைந்த போதிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது தினமும் 5 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.