விதிமீறல்: 10 கடைகளுக்கு ரூ.55,000 அபராதம்
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்தில் விதிமீறி செயல்பட்ட 10 கடை உரிமையாளா்களுக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்தில் விதிமீறி செயல்பட்ட 10 கடை உரிமையாளா்களுக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பொதுமுடக்கம் அமல்படுத்தியுள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முகக்கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மற்றும் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனா்.
அதன்படி, மாநகராட்சி, மத்திய மண்டலப் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, 25 ஆவது வாா்டு, கிருஷ்ணசாமி சாலையில் அமைந்துள்ள ஒரு தனியாா் வணிக வளாகத்தில் செயல்பட்ட உணவகங்கள் உள்ளிட்ட 10 கடைகள் சமூக இடைவெளி பின்பற்றாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அக்கடைகளுக்கு தலா ரூ. 5,500 வீதம் மொத்தம் ரூ.55,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...