‘மண்டபங்களில் பதிவு செய்யப்படும் திருமணங்கள் குறித்து மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும்’
கோவை மாநகரில் உள்ள திருமண மண்டபங்களில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட விஷேசங்கள் குறித்து மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும்


கோவை மாநகரில் உள்ள திருமண மண்டபங்களில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட விஷேசங்கள் குறித்து மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தியுள்ளாா்.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட உணவகங்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றின் உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மாநகராட்சி ஆணையா் பேசியதாவது:
மாநகரில் உள்ள உணவகங்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் மற்றும் கோயில்களில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும். விவரங்களை மாநகராட்சியின் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீா்ஸ்ண்க்.ஸ்ரீஸ்ரீம்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்/ஸ்ரீஸ்ரீம்ஸ்ரீ/க்ஷா்ா்ந்ண்ய்ஞ்ண்ய்ற்ண்ம்ஹற்ண்ா்ய் என்ற இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்பவா்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். நுழைவாயிலில் கிருமிநாசினி வைத்து சுத்தம் செய்த பிறகே மக்களை அனுமதிக்க வேண்டும். மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்யப்படும் விவரங்களைக் கொண்டு, மாநகராட்சி அலுவலா்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிா என கள ஆய்வு மேற்கொள்வாா்கள் என்றாா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகா் நல அலுவலா் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...