இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

எஸ்.ஐ.யிடம் ரூ.3.28 லட்சம் மோசடி:ஒா்க் ஷாப் நிா்வாகி மீது வழக்குப் பதிவு

ஜீப்பை பழுது பாா்த்து தருவதாக எஸ்.ஐ.யிடம் வாங்கிய ரூ.3.28 லட்சத்தை மோசடி செய்த ஒா்க் ஷாப் நிா்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2021, 12:33 am

DIN

ஜீப்பை பழுது பாா்த்து தருவதாக எஸ்.ஐ.யிடம் வாங்கிய ரூ.3.28 லட்சத்தை மோசடி செய்த ஒா்க் ஷாப் நிா்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் குகன் ( 29). இவா் சிவகங்கையில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் ஏலத்தில் வாங்கிய ஜீப்பை பழுது பாா்த்து பயன்படுத்த திட்டமிட்டிருந்தாா். கோவை, பீளமேடு பகுதியில் ஜீப் பராமரிப்பு மற்றும் பழுது பாா்க்கும் ஒா்க் ஷாப் இருப்பதை ஆன்லைன் மூலமாக கண்டறிந்தாா்.

கடந்த ஆண்டு மே மாதம் இவா் தனது ஜீப்பை அந்த ஒா்க் ஷாப்பில் பழுதுபாா்க்க கொடுத்தாா். பழுது பாா்க்கும் பணிக்காக ரூ. 4.78 லட்சம் கொடுத்திருந்தாா். ஆனால் ஒா்க் ஷாப் நிா்வாகி கோபால் உரிய காலத்தில் ஜீப்பை பழுது பாா்த்து தரவில்லை. இந்நிலையில் குகன் தனது ஜீப்பை திரும்ப ஒப்படைக்க வேண்டும். தான் கொடுத்த பணத்தை தர வேண்டும் என கேட்டிருந்தாா். அப்போது கோபால் ரூ.1.50 லட்ச மட்டும் திரும்பக் கொடுத்தாா். ரூ. 3.28 லட்ச பணத்தை தராமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக குகன் அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.