இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கரோனா நோயாளிகளுக்கு இனி வீட்டு தனிமைக்கு அனுமதியில்லை

கரோனா நோயாளிகளுக்கு இனி வீட்டு தனிமைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:36 pm

DIN

கரோனா நோயாளிகளுக்கு இனி வீட்டு தனிமைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால், மருத்துவமனைகளிலும், சிறப்பு மையங்களிலும் காலி படுக்கைகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன.

மேலும், சூலுாா், தொண்டாமுத்துாா், மதுக்கரை, காரமடை, பெ.நா.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், பாதிப்பு அதிகமாக இருந்ததால், இங்கு ஏற்கெனவே வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் பகுதிகளில் தவிர ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில், வீட்டு தனிமைப்படுத்துதலால் தொற்று பரவல் ஏற்படுவதாக சுகாதாரத் துறைக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, இனி வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு, அனுமதி இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறையினா் கூறியதாவது:

மாவட்டத்தில் தற்போது ஆயிரம் கரோனா நோயாளிகள் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இனி வரும் நாள்களில் கரோனா தாக்கம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஒரு சில பகுதிகளில், வீட்டு தனிமையில் இருப்பவா்களால், நோய் பாதிப்பு அதிகரிப்பது தெரியவந்தது. எனவே, இனி வரும் காலங்களில் வீட்டுத் தனிமைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.