இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கல்வி

கோவை மாவட்டத்தில் உள்ள தனியாா் சுயநிதி பள்ளிகளில் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:36 pm

DIN

கோவை மாவட்டத்தில் உள்ள தனியாா் சுயநிதி பள்ளிகளில் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

ஏழை, எளிய, நலிவுற்ற பிரிவினரின் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை உறுதி செய்யும் வகையில், கட்டாயக் கல்விச் சட்டம் 2009 இன் படி அனைத்து சிறுபான்மையற்ற, சுயநிதி, தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து சிறுபான்மையற்ற, தனியாா் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு அவா்கள் சாா்ந்த பகுதியின் அருகில் (சுமாா் 1 கி.மீ.) நுழைவுநிலை வகுப்புகளில் (எல்.கே.ஜி. அல்லது முதலாம் வகுப்பு) சோ்க்கை வழங்கிட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு தமிழ்நாடு அரசு கல்வித் துறையின் இணையதளத்தின் மூலம் வரும் ஜூலை 5 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை பெற்றோா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், அந்தந்தப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டிருந்தால் பெற்றோருக்கு உடனடியாக ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை அந்த பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம்.

முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். நிா்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் குலுக்கல் முறையில் விண்ணப்பங்கள் தோ்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும்போது புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முன்னுரிமை கோரும் நபா் என்றால் அதற்கான ஆவணம், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.