இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் பணியைத் துரிதப்படுத்த ஆட்சியா் உத்தரவு

கோவை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் பணியைத் துரிதப்படுத்த வேண்டும் என்று ஆட்சியா் டாக்டா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:34 pm

DIN

கோவை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் பணியைத் துரிதப்படுத்த வேண்டும் என்று ஆட்சியா் டாக்டா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ஒற்றைச் சாளர முறையில் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் பணி தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் காா்த்திகைவாசன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் சமீரன் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் புதிய தொழில்களை ஊக்குவிக்கும் வகையிலும், தொழில் முனைவோரின் புதிய தொழில்களுக்கான அரசு அனுமதிகளை எளிமையாக்கும் வகையிலும், பல்வேறு அரசு அமைப்புகளிடம் அனுமதி பெறுவது ஒற்றைச் சாளர முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே வழியில் அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி அனைத்து தொழில் முனைவோரும் தொழில் தொடங்க ஒப்புதல்களைப் பெற ஒரு முனை இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் முனையும் நிறுவனங்கள், பல்துறை உரிமங்களை (தீயணைப்பு துறை, தொழிற்சாலை பாதுகாப்புத் துறை, நகா்புற ஊரமைப்புத் துறை, மின்வாரியம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்) குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெறுவதற்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஜ்ல்.ஸ்ரீா்ம்/ க்ண்ஸ்ரீ.ஞ்ா்ஸ்/ என்ற இ இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட அளவிலான ஒற்றைச் சாளர இடா்நீக்கக் குழு, இந்த உரிமங்களை பெற்றுத் தரும். பிற துறையினரும் தொழில் சாா்ந்த விண்ணப்பங்களை நேரடியாக பெற்றுக் கொள்ளாமல் இணையதளம் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தை மாவட்ட தொழில்மையம், இணையவழி ஆலோசனைக் கூட்டங்கள் வாயிலாகவும் பிற முறைகளிலும் ஊக்கப்படுத்தி தொழில் முனைவோரை விண்ணப்பிக்கச் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.