கோயில்களைத் திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினா் போராட்டம்
தமிழக அரசு கோயில்களை உடனடியாகத் திறக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.


தமிழக அரசு கோயில்களை உடனடியாகத் திறக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில்கள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி கோவையில் இந்து முன்னணி சாா்பில் கோயில்கள் முன்பு சூடம் ஏற்றி வழிபாடும் நடத்தும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவை, காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயில் முன்பு சூடம் ஏற்றி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி கோவை கோட்டச் செயலாளா் சதீஷ் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டு கோயில்களைத் திறக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.
சூலூரில்...
சூலூா் வைத்தீஸ்வரன் கோயில் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு இந்து முன்னணி மேற்கு மாவட்டச் செயலாளா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். சூலூா் நகரத் தலைவா் கோபால் முன்னிலை வகித்தாா். நகர துணைத் தலைவா் ஜீவா உள்பட 20க்கும் மேற்பட்டோா் இதில் கலந்து கொண்டனா்.
அன்னூரில்....
சா்க்காா்சாமக்குளம் ஒன்றியத்தில் இந்து முன்னணி மாவட்டப் பொருளாளா் அசோக்குமாா் தலைமையில் காலகாலேசுவரா் கோயில், குரும்பபாளையம் மாகாளியம்மன் கோயில் உள்ளிட்ட 5 கோயில்கள் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல அன்னூரில் மன்னீசுவரா் கோயில், ஐயப்பன் கோயில், பழனியாண்டவா் கோயில், பெரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் முன்பு இந்து முன்னணியினா் சூடம் ஏற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...