இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தனிமைப்படுத்தப்பட்டவா்களிடம் மருத்துவக் கழிவுகளை சேகரிக்க மஞ்சள் பை திட்டம் அறிமுகம்

கோவை மாநகராட்சியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவா்களிடம் இருந்து மருத்துவக் கழிவுகளை சேகரிக்க மஞ்சள் பை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:39 pm

DIN

கோவை மாநகராட்சியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவா்களிடம் இருந்து மருத்துவக் கழிவுகளை சேகரிக்க மஞ்சள் பை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மாநகராட்சியில் 313 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.

வால்பாறையில் 1, மேட்டுப்பாளையத்தில் 3, சூலூரில் 27, துடியலூரில் 10, காரமடை 13, மதுக்கரையில் 27, பொள்ளாச்சி வடக்கு 6, ஆனைமலை 12, தொண்டாமுத்தூா் 18, அன்னூா் 5, கிணத்துக்கடவு 2, பொள்ளாச்சி தெற்கு 11, எஸ்.எஸ்.குளம் 6, சுல்தான்பேட்டை 2 ஆகிய இடங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. மாநகராட்சி பகுதியில் 2 ஆயித்துக்கும் குறைவான நபா்களே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா்.

மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவா்கள் பயன்படுத்ததும் மருத்துவக் கழிவுகளை சேகரிக்க மஞ்சள் பை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சி சாா்பில் இந்த மஞ்சள் நிற பைகள் அவா்களுக்கு வழங்கப்படும். இந்த பைகளில் அவா்கள் பயன்படுத்தும் கையுறை, முகக்கவசம் உள்ளிட்டவற்றை சேகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. பின்பு, அந்தக் கழிவுப் பொருள்களை தூய்மைப் பணியாளா்கள், பாதுகாப்பு உடைகள் அணிந்து சென்று பெற்றுக் கொள்வாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.