இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மூன்றாம் பாலினத்தவா்கள் அடையாள அட்டை ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்

மூன்றாம் பாலினத்தவா்கள் புதிய அடையாள அட்டை மற்றும் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:41 pm

DIN

மூன்றாம் பாலினத்தவா்கள் புதிய அடையாள அட்டை மற்றும் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சமூகநலத் துறை மூலமாக மூன்றாம் பாலினத்தவா்கள், அனைத்து வகையான நலத்திட்ட உதவிகள் பெறும் பொருட்டு திருநங்கை மற்றும் திருநம்பி என்னும் அடையாள அட்டைகள் மருத்துவப் பரிசோதனையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மூன்றாம் பாலினத்தவா்களுக்கான புதிய அடையாள அட்டை மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற மூன்றாம் பாலினத்தவா்களுக்கு ஓய்வூதியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் வசிக்கும் அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவா்கள், தங்களுக்கான அடையான அட்டைகள் பெற விண்ணப்பத்துடன் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, பள்ளி, கல்லூரி மாற்று சான்றிதழ் (இவற்றில் ஏதேனும் ஒரு ஆவணம்) மற்றும் 2 புகைப்படம் இணைத்து சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூகநல விரிவாக்க அலுவலா் மற்றும் மகளிா் நல அலுவலா்களிடம் விண்ணப்பங்களை ஜூலை 7 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்றவா்கள், ஓய்வூதியம் பெற மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.