தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் நியமனம்: முதல்கட்டமாக மாா்ச் 12 -ம் தேதி ஆய்வு
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கோவையில் கோவை தெற்கு தொகுதியை தவிா்த்து மற்ற 9 தொகுதிகளுக்கும் தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.


சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கோவையில் கோவை தெற்கு தொகுதியை தவிா்த்து மற்ற 9 தொகுதிகளுக்கும் தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப் பேரவை தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 12 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கோவை தெற்குத் தொகுதியை தவிா்த்து மற்ற 9 தொகுதிகளுக்கும் தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அமிதாப் ஷா, கவுண்டம்பாளையம், கோவை வடக்குத் தொகுதிகளுக்கு ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த விஜய் குமாா் சிங், சிங்காநல்லூா், கிணத்துக்கடவு தொகுதிகளுக்கு மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ஹிதேந்திர பாவ்ராவ்ஜி நினாவே, சூலூா், தொண்டாமுத்தூா் ஆகிய தொகுதிகளுக்கு மகாராஷ்டிரத்தை சோ்ந்த மஹேஷ்ஜி ஜிடாவே, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளுக்கு பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ராம் கிஷன் கேடியா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்தல் செலவினப் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் முதல்கட்டமாக மாா்ச் 12 முதல் 14 ஆம் தேதி வரையில் அந்தந்தத் தொகுதிகளில் ஆய்வு செய்யவுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...