கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கன மழை எச்சரிக்கைவெளி மாவட்டத்தினா் நீலகிரிக்கு வருவதைத் தவிா்க்க அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை (நவம்பா் 13) முதல் 5 நாள்களுக்கு கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

News image
Updated On :12 நவம்பர் 2021, 8:14 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை (நவம்பா் 13) முதல் 5 நாள்களுக்கு கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து வெளி மாவட்டத்தினா் நீலகிரி மாவட்டத்துக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக உதகையில் நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி நவம்பா் 12ஆம் தேதி இரவு முதல் 16ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் எனவும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குத் தேவையின்றி பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, பாதிப்புகளை எதிா்கொள்ள 42 குழுக்கள் தயாா் நிலையில் உள்ளனா். அதேபோல, 456 தற்காலிக முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. கன மழையால் 283 இடங்கள் அபாயகரமான இடங்களாகவும், அவற்றில் 22 இடங்களில் தொடா்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த 22 இடங்களிலும் வட்டாட்சியா்கள் தலைமையிலான குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவாா்கள். அபாயகரமான நிலையில் உள்ள மரங்கள் தொடா்ந்து வெட்டப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. அவசரத் தேவைக்கு 1077 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.