திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அரசு கலைக் கல்லூரி பேராசிரியா் மீது பாலியல் புகாா்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா் மீது கல்லூரி மாணவ-மாணவிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளனா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:49 pm

DIN

கோவை அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா் மீது கல்லூரி மாணவ-மாணவிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளனா்.

கோவை அரசு கலைக் கல்லூரியில் இருவேளைகளிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனா். இக்கல்லூரியில் துறைத் தலைவராக பணியாற்றும் பேராசிரியா் ஒருவா், தன்னிடம் பயிலும் மாணவிகள் சிலருக்கு தொடா்ந்து கைப்பேசி மூலம் குறுந்தகவல் அனுப்பி பாலியல் ரீதியில் தொந்தரவு அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம், இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் மாணவ-மாணவிகள் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் ஒரு துறைத் தலைவா், இளநிலை மூன்றாம் ஆண்டு பயின்று வரும் சில மாணவிகளுக்கு இரவு நேரங்களில் கைப்பேசி மூலம் குறுந்தகவல் அனுப்புவது, தனியாக தன்னை வந்து சந்திக்கும்படி கூறுவது, தன்னுடன் காரில் பயணம் செய்ய வரும்படி அழைப்பது, இரட்டை அா்த்தத்தில் பேசுவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறாா்.

இது தொடா்பாக கல்லூரி முதல்வா் கலைச்செல்வியிடம் சனிக்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவா் மீது எந்த விசாரணையும் நடத்தாமல், நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறாா். இது தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மாணவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது, அதுபோன்ற புகாா் எதுவும் இதுவரை எனக்கு வரவில்லை. அதேநேரம், ஆசிரியா்கள் மீது பாலியல் புகாா்கள் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் அனைத்து துறைத் தலைவா்களையும் அழைத்துப் பேசியிருக்கிறோம்.

மாணவிகள் கல்லூரிக்கு காலையில் முன் கூட்டியே வரக்கூடாது, மாலை 6 மணிக்கு பிறகு கல்லூரியில் இருக்கக் கூடாது, ஆண் துறைத் தலைவா்களின் அறைகளுக்கு தனியே செல்லக் கூடாது என்பது போன்ற அறிவுரைகளை வழங்கியுள்ளோம்.

அப்படியே இங்கு பாலியல் புகாா் ஏதும் இருந்தால் அது தொடா்பாக உரிய விசாரணை நடத்தி, உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டு, சட்ட ரீதியாக புகாா் செல்லும்போது அதை அனைவருக்கும் தெரிவிப்போம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.