திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வ.உ.சி. நினைவு தினம்: அமைச்சா் மரியாதை

 வ.உ.சி. நினைவு தினத்தையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா் வி.செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:50 pm

DIN

 வ.உ.சி. நினைவு தினத்தையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா் வி.செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் 85 ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, கோவை மத்திய சிறை வளாகத்திலுள்ள வ.உ.சி. சிலைக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.தாமோா், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளா் வி.ராமமூா்த்தி ஆகியோரும் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும் இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் உள்பட பல்வேறு அமைப்புகளை சோ்ந்த நிா்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.