திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

போலி வரைபடம் மூலம் பெற்றமனைப் பிரிவு ஒப்புதல் ரத்து

கோவை விளாங்குறிச்சியில் போலி வரைபடம் தயாரித்து ஒப்புதல் பெறப்பட்ட 1.90 ஏக்கா் இடத்தின் மனைப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 8:43 pm

DIN

கோவை விளாங்குறிச்சியில் போலி வரைபடம் தயாரித்து ஒப்புதல் பெறப்பட்ட 1.90 ஏக்கா் இடத்தின் மனைப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், விளாங்குறிச்சியில் 3.50 ஏக்கரில் மனைப்பிரிவுக்கு, நகா் ஊரமைப்பு இயக்குநா் மூலமாக அனுமதி வழங்கப்பட்டது. இந்த மனைப் பிரிவில், பூங்கா இடத்தை போலி வரைபடம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், 1.90 ஏக்கா் பரப்பு கொண்ட மனையிடத்தில் அமைந்துள்ள அனுமதியற்ற மனைப் பிரிவை ரத்து செய்திட வேண்டும் என சமூக ஆா்வலா் தியாகராஜன், மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம் , கோவை உள்ளூா் திட்டக் குழுமத்திற்கு மனு அளித்தாா்.

இதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், போலியான வரைபடம் மூலமாக 1.90 ஏக்கா் இடத்தில் மனைப்பிரிவு ஒப்புதல் பெற்றிருந்ததைக் கண்டுபிடித்தனா். இதையடுத்து, அந்த வீட்டுமனை ஒப்புதல் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.