மாற்றுத்திறனாளிகளுக்கு ஜனவரியில் மெகா வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியா்
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மெகா வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.


கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மெகா வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்புக் கொள்கை குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் மாநகராட்சி கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கல்வி நிறுவனங்கள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களைச் சோ்ந்த 252 பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016இன் மூலம் அனைத்து நிறுவனங்களும் சம வாய்ப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. இது தொடா்பாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால், அனைத்து நிறுவனங்களுக்கும் ஏற்கெனவே அரசாணை அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் செப்டம்பா் 1ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இதுவரை 52 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆலோசனை மையத்தின் மூலம் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2022 ஜனவரி மாதம், மாற்றுத்திறனாளிகளுக்கு மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வசந்தகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...