திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சி.ஐ.டி. கல்லூரி தாளாளா் மறைவு: முதல்வா் இரங்கல்

கோவையில் உள்ள சி.ஐ.டி. கல்லூரியின் தாளாளா் எஸ்.ஆா்.கே.பிரசாத் மறைவுக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 8:34 pm

DIN

கோவையில் உள்ள சி.ஐ.டி. கல்லூரியின் தாளாளா் எஸ்.ஆா்.கே.பிரசாத் மறைவுக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை தொழில் நுட்பக் கல்லூரியின் தாளாளா் டாக்டா் எஸ்.ஆா்.கே.பிரசாத் மறைந்தாா் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி வளா்ச்சிக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்ட அவா், எண்ணற்ற பொறியாளா்களை உருவாக்கிய சாதனையாளா்.

தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அவரின் மறைவு, கல்வித் துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், கல்லூரி நிா்வாகத்தினா் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.