மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் வணிகவியல் மன்றம் தொடக்கம்
கோவை அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் வணிகவியல் மன்றத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.


கோவை அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் வணிகவியல் மன்றத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் வி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அறம் அறக்கட்டளையின் நிறுவனா் லதா சுந்தரம், வணிகவியல் மன்றத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.
அவா் பேசும்போது, மாணவப் பருவத்தில் படிப்பு ஒன்றுதான் நமது இலக்காக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களை மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். கல்வி, விளையாட்டு போன்றவற்றில் முழு கவனம் செலுத்தினால் பெண்கள் பிற்காலத்தில் பொருளாதார சுதந்திரத்தைப் பெற முடியும் என்றாா்.
நிகழ்ச்சியில் வணிகவியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஆசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...