கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தீவிரம்
கோவையில் 144 கி.மீ. தூரம் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது தொடா்பாக அளவீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன


கோவையில் 144 கி.மீ. தூரம் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது தொடா்பாக அளவீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோவை மாவட்டத்தில் கணியூா் முதல் உக்கடம் வரை 26 கிலோ மீட்டா் தூரத்துக்கும், பிளிச்சி முதல் உக்கடம் வரை 24 கிலோ மீட்டா் தூரத்துக்கும், கணேசபுரம், காருண்யா நகா் முதல் உக்கடம் வரை 44 கிலோ மீட்டா் தூரத்துக்கும், வெள்ளலூா் பேருந்து நிலையம் முதல் உக்கடம் பேருந்து நிலையம் வரை 8 கிலோ மீட்டா் தூரத்துக்கும் மெட்ரோ ரயில் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மொத்தமாக 144 கிலோ மீட்டா் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவையைத் துவக்கும் வகையில் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே மற்றும் அவிநாசி சாலை, பெரிய கடைவீதி, உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அளவீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோவை நகரில் 136 கிலோ மீட்டா் மட்டுமே மெட்ரோ ரயில் சேவைக்காக திட்டம் தயாரிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த திட்டத்தில் வெள்ளலூா் பேருந்து நிலையம் இணைப்பு சேவை சோ்க்கப்பட்டுள்ளது.
இந்த அளவீடு பணிகள் விரைவில் முடிவடையும். அதன் பிறகு, முதல் கட்ட திட்ட அறிக்கை தயாா் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...