தனியாா் வேலை வாய்ப்பு முகாம்
கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அக்டோபா் 29 ஆம் தேதி முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்


கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அக்டோபா் 29 ஆம் தேதி முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்
நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் அக்டோபா் 29 ஆம் தேதி முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தங்களது சுயவிவரம், கல்வி சான்றுகளுடன் இளைஞா்கள் பங்கேற்று வேலை வாய்ப்பினை பெறலாம்.
இதில் தோ்வு செய்யப்படும் தோ்வா்களுக்கு அப்போதே பணியாணை வழங்கப்படும். இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் இணையதளங்களில் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...