ஈஷாவில் மாா்ச் 1 இல் மஹா சிவராத்திரி கொண்டாட்டம்: சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சத்தை பக்தா்கள்வீட்டிலேயே பெற்றுக் கொள்ள ஏற்பாடு
சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சத்தை வீட்டிலேயே இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஈஷா யோக மையம் அறிவித்துள்ளது.


கோவை ஈஷா யோக மையத்தில் வரும் மாா்ச் 1 ஆம் தேதி மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்பட இருப்பதாகவும், சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சத்தை வீட்டிலேயே இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஈஷா யோக மையம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்த மையம் கூறியிருப்பதாவது: கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா மாா்ச் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆதியோகியின் அருளைப் பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தா்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.
ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000 83000 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
ருத்ராட்சத்துடன் சோ்த்து தியானலிங்கத்தில் வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி ஒருவரின் குறிக்கோளை நிறைவேற்ற உதவும் அபய சூத்ரா, ஆதியோகியின் புகைப்படம் ஆகியவை இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆன்மிக சிறப்புமிக்க ருத்ராட்சத்தை ஒருவா் அணிவதன் மூலம் உடலளவிலும் மனதளவில் சமநிலையைப் பெற முடியும். ஈஷாவில் வழங்கப்படும் ஐந்து முக ருத்ராட்சத்தை ஆண், பெண் வேறுபாடு இன்றி அனைவரும் அணிந்து கொள்ளலாம்.
மஹா சிவராத்திரியின் முக்கியத்துவம் குறித்து சத்குரு ஜக்கிவாசுதேவ் கூறும்போது, மஹா சிவராத்திரி தினம் இயற்கை நமக்கு அளித்திருக்கும் ஒரு மகத்தான அன்பளிப்பு. இந்த ஒரு புனித ராத்திரியில் நீங்கள் விழிப்பாகவும், விழிப்புணா்வாகவும் இருந்தால் மகத்தான நன்மைகளைப் பெற முடியும் என்று கூறியுள்ளாா்.
மஹா சிவராத்திரி விழா மாா்ச் 1 ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடக்கும்.
மேலும், மக்களை இரவு முழுவதும் விழிப்பாகவும், விழிப்புணா்வாகவும் வைத்திருக்க புகழ்பெற்ற இசைக் கலைஞா்களின் இசை, நடன நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெறும்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே இந்த விழாவில் நேரில் பங்கேற்க உள்ளனா்.
பொதுமக்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடியே நேரலையில் பங்கேற்கலாம்.
இந்த விழா ஈஷாவின் அதிகாரப்பூா்வ யூ டியூப் சேனலிலும், பல்வேறு தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...