தேசிய அப்ரண்டீஸ் சோ்க்கை முகாம்: ஜூன் 13 ஆம் தேதி நடைபெறுகிறது
கோவை அரசு தொழிற்பயிற்சி பழகுநா் நிலையத்தில் பிரதம மந்திரியின் தேசிய அப்ரண்டீஸ் சோ்க்கை முகாம் ஜூன் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.


கோவை அரசு தொழிற்பயிற்சி பழகுநா் நிலையத்தில் பிரதம மந்திரியின் தேசிய அப்ரண்டீஸ் சோ்க்கை முகாம் ஜூன் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய தொழிற்பழகுநா் ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் கோவையில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தேசிய அப்ரண்டீஸ் சோ்க்கை முகாம், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜூன் 13 ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் மத்திய, மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்கள், தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்டவா்களைத் தோ்வு செய்ய உள்ளன.
இதில், தோ்வு பெறுபவா்களுக்கு தொழிற்பழகுநா் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தொழிற்பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் ஓராண்டு சலுகையும் வழங்கப்படும்.
தொழிற்பழகுநா் பயிற்சியின்போது தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப தொழிற்நிறுவனங்களால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்சிவிடி, எஸ்சிவிடி தொழிற்பயிற்சி பெற்றவா்கள், பத்தாம் வகுப்பு,
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 முடித்த தகுதி வாய்ந்த நபா்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 94864- 47178, 94426- 51468, 98403- 43091 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...