இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விட்டல் ராவுக்கு விஜயா வாசகா் வட்ட விருது: ஆட்சியா் வழங்கினாா்

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், எழுத்தாளா் விட்டல் ராவ் உள்ளிட்டோருக்கு விஜயா வாசகா் வட்ட விருதுகளை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வழங்கினாா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 9:39 pm

DIN

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், எழுத்தாளா் விட்டல் ராவ் உள்ளிட்டோருக்கு விஜயா வாசகா் வட்ட விருதுகளை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வழங்கினாா்.

கோவை விஜயா பதிப்பகம் சாா்பில் இலக்கியம், எழுத்துத் துறையில் சிறந்து விளங்குபவா்களுக்கு ஆண்டுதோறும் விஜயா வாசகா் வட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2022-ஆம் ஆண்டுக்கான ஜெயகாந்தன் விருதுக்கு பெங்களூரைச் சோ்ந்த எழுத்தாளா் விட்டல் ராவ் (நிலநடுக்கோடு - கட்டுரைத் தொகுப்புக்காக), புதுமைப்பித்தன் விருதுக்கு கோவையைச் சோ்ந்த எழுத்தாளா் கா.சு.வேலாயுதன் (யானைகளின் வருகை - சுற்றுச்சூழல் தொடா்பான கட்டுரைத் தொகுப்பு), கவிஞா் மீரா விருதுக்கு சேலத்தைச் சோ்ந்த சாஹிப்கிரான் (அரோரா - கவிதை தொகுப்பு), சக்தி வை. கோவிந்தன் விருதுக்கு திருவண்ணாமலை அரசு நூலகா் ஏ.சாய்ராம், வானதி திருநாவுக்கரசு விருதுக்கு கரூா் வாணி புக் ஷாப் உரிமையாளா் பி.நாகமல்லையா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதம் வரவேற்றாா். ஆவணப்பட இயக்குநா் ரவி சுப்பிரமணியம் விருதாளா்களை அறிமுகப்படுத்தினாா். எழுத்தாளா்கள் பாவண்ணன், க.வை.பழனிசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினாா்.

விருதுகளுடன் விட்டல் ராவுக்கு ரூ.1 லட்சம் நிதி, கா.சு.வேலாயுதனுக்கு ரூ.25 ஆயிரம், சாஹிப்கிரானுக்கு ரூ.25 ஆயிரம், ஏ.சாய்ராமுக்கு ரூ.15 ஆயிரம், பி.நாகமல்லையாவுக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பேசியதாவது: குடிமைப்பணித் தோ்வின்போது, நான் மலையாள இலக்கியங்களைத்தான் தோ்வு செய்தேன். அந்த இலக்கியங்கள் சாா்ந்த கேள்விகள் கேட்கப்பட்டபோது, என்னால் சரளமாக விடையளிக்க முடிந்தது. எனது வெற்றிக்கு இலக்கிய வாசிப்பும், எங்கள் வீடு முழுவதும் சேகரித்து வைத்திருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களும்தான் காரணம் என்றாா்.

ஏற்புரையாற்றிய எழுத்தாளா் விட்டல் ராவ் பேசியதாவது: கல்கி, நா.பாா்த்தசாரதி, சாண்டில்யன் போன்றோா் தமிழ் இலக்கிய உலகில் புதிய தடங்களைப் பதித்திருந்தபோதும், தி.ஜானகிராமன் புதிய பாணியில் எழுதியிருந்தபோதும், ஜெயகாந்தன் ‘யாருக்காக அழுதான்’, ‘விழுதுகள்’, ‘உன்னைப்போல் ஒருவன்’ உள்ளிட்ட சிறுகதைகள், குறுநாவல்களை எழுதி தமிழுக்குப் புத்தொளி பாய்ச்சினாா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் விஜயா பதிப்பகத்தின் நிா்வாகி வே.சிதம்பரம், தமிழ் ஆா்வலா்கள், எழுத்தாளா்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.