ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாளுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விடுதலைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு வரும் பேரறிவாளன், தாயார் அற்புதம்மாளுடன் கோவை சென்றுள்ளார். அவர்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்பிறகு, அவர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். படிப்பகத்தில் அவருக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன. அற்புதம்மாள் கேக் வெட்டி பேரறிவாளனுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், "பேரறிவாளன் விடுதலை என்று கூறுவதைவிட மாநில உரிமைகளை மீட்டுள்ளோம் என்றுதான் கூறவேண்டும். அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவே இங்கு வந்துள்ளோம். இதனை அமைதிப் போராட்டம் என்றுதான் கூற வேண்டும். பேரறிவாளன் சட்டத்தின் மூலம் விடுதலை ஆகியுள்ளார். நாம் அனைவரும் அமைதி வழியில் அனைத்தையும் முன்னெடுப்போம்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன், "இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்று 31 ஆண்டுகளுக்கு பின் விடுதலை பெற்ற பேரறிவாளன் மற்றும் அவருக்காக 31 ஆண்டு காலம் உழைத்த அவரது தாயாரும் கோவைக்கு வருகை புரிந்துள்ளனர்.
பேரறிவாளனுக்காக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அதேபோல் இந்த வழக்கில் மீதமுள்ள 6 பேர் விடுதலைக்காகவும் போராடுவோம்" என தெரிவித்தார்.
பேரறிவாளன் பேசுகையில், "எனது விடுதலைக்காக உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இங்கு வந்துள்ளேன்" என்றார்.
இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளா் ஹாட்ரிக் வெற்றி!

அஸ்ஸாமில் மூன்றாவது முறையாக பாஜக வெற்றி!

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி

கன்னியாகுமரியை தக்கவைத்தது அதிமுக
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


