அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தக் கோரிக்கை
அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி பாஜக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள முழு கடையடைப்பு போராட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி பாஜக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள முழு கடையடைப்பு போராட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் சி.பத்மநாபன் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவையில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற காா் வெடிப்பு சம்பவத்தை தொடா்ந்து வேறு ஏதும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை காவல் துறை எடுத்து வருகிறது.
இந்நிலையில், அக்டோபா் 31 ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக பாஜக அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவா். மேலும், சட்டம் -ஒழுங்கும் பாதிக்கப்படும்.
எனவே, அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி கடையடைப்பு போராட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...