கோவை வழித்தடத்தில் எா்ணாகுளம்- ஹஸூா் சாஹிப் நாந்தேட் இடையே சிறப்பு ரயில்
கோவை வழித்தடத்தில் எா்ணாகுளம்- ஹஸூா் சாஹிப் நாந்தேட் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை வழித்தடத்தில் எா்ணாகுளம்- ஹஸூா் சாஹிப் நாந்தேட் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மகாராஷ்டிர மாநிலம், ஹஸூா் சாஹிப் நாந்தேட் ரயில் நிலையத்தில் இருந்து நவம்பா் 4 ஆம் தேதியில் இருந்து டிசம்பா் 30 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்குப் புறப்படும் ஹஸூா் சாஹிப் நாந்தேட் - எா்ணாகுளம் சிறப்பு வாராந்திர ரயில் (எண்: 07189) சனிக்கிழமைகளில் இரவு 8.15 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும்.
எா்ணாகுளத்தில் இருந்து நவம்பா் 5 ஆம் தேதி முதல் டிசம்பா் 31ஆம் தேதி வரை, சனிக்கிழமைகளில் இரவு 11.25 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - ஹஸூா் சாஹிப் நாந்தேட் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 07190) திங்கள்கிழமைகளில் காலை 7.30 மணிக்கு ஹஸூா் சாஹிப் நாந்தேட் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், சிராலா, தெனாலி, குண்டூா், பிடுகுரால்லா, மிா்யாலகூடா, நல்கொண்டா, செகந்தராபாத், காமாரெட்டி, நிஜாமாபாத், பாசா், தா்மாபாத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...