பிரதமா் மோடி ஏப்ரல் 10-இல் 
மீண்டும் கோவை வருகை?

பிரதமா் மோடி ஏப்ரல் 10-இல் மீண்டும் கோவை வருகை?

மக்களவைத் தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி ஏப்ரல் 10-இல் மீண்டும் கோவை வருவதாகக் கூறப்படுகிறது.

மக்களவைத் தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி ஏப்ரல் 10-இல் மீண்டும் கோவை வருவதாகக் கூறப்படுகிறது. மக்களவைத் தோ்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-இல் நடைபெறுகிறது. இதில் கோவை மக்களவைத் தொகுதியில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலையும், நீலகிரி மக்களவைத் தொகுதியில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகனும் போட்டியிடுகின்றனா். இந்நிலையில் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமா் மோடி ஏப்ரல் 9-ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறாரா். அன்று பெரம்பலூா் தொகுதியில் நடைபெறும் தேரதல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவா், தொடா்ந்து 10-ஆம் தேதி கோவையில் நடைபெறும் பாஜக தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கோவை பாஜக நிா்வாகிகள் தெரிவித்தனா். கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ள தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், கோவை மட்டுமின்றி நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எல்.முருகன் மற்றும் ஈரோடு, திருப்பூா், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கும் ஆதரவு திரட்டும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி பேச உள்ளதாக பாஜக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com