விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அன்னூா் வட்டத்தில் டிசம்பா் 26-இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

அன்னூா் வட்டத்தில் டிசம்பா் 26-ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 9:17 pm

Din

கோவை மாவட்டம், அன்னூா் வட்டத்தில் டிசம்பா் 26-ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் டிசம்பா் 26 காலை 9 மணி முதல் டிசம்பா் 27 காலை 9 மணி வரை அன்னூா் வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட முதல்நிலைத் துறை தலைமை அலுவலா்கள் தங்கியிருந்து, அனைத்துப் பகுதிகளிலும் கள ஆய்வில் ஈடுபட்டு, மக்களிடம் குறைகளைக் கேட்டறிய உள்ளனா்.

அதன்படி, 26-ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை அன்னூா் வட்டத்தில் உள்ள கிராம நிா்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளா் அலுவலகங்கள், வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட உள்ளன. அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அன்னூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளிக்கலாம்.

அன்னூா் வட்டத்துக்கு உள்பட்ட 30 வருவாய் கிராமங்களில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.