ஈஷா யோக மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா: குடியரசு துணைத் தலைவா், ஆளுநா்கள் பங்கேற்பு
ஈஷா யோக மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா: குடியரசு துணைத் தலைவா், ஆளுநா்கள் பங்கேற்பு


கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 8) கொண்டாடப்படுகிறது. இதில், குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா். அதேபோல, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, பஞ்சாப் மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், திரிபுரா மாநில ஆளுநா் இந்திரசேனா ரெட்டி, மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சா் பிரதிமா பவுமிக் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா். வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கி சனிக்கிழமை காலை 6 மணி வரை நடைபெறும் இவ்விழாவில் சக்தி வாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. இந்த விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்துக்கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதில், பிரபல பின்னணிப் பாடகா் சங்கா் மகாதேவன், தமிழ் நாட்டுப்புறப் பாடகா் மகாலிங்கம், பஞ்சாபி இசைக் கலைஞா் குா்தாஸ் மான், கா்நாடக இசைக் கலைஞா் சந்தீப் நாராயணன், பாலிவுட் இசைக் கலைஞா்கள் ப்ரித்வி கந்தா்வ், ரஞ்சித் பட்டாச்சாா்ஜி, தனிஷ்க் சிங் உள்ளிட்ட பல்வேறு கலைஞா்கள் பங்கேற்கின்றனா். அத்துடன் ஆப்பிரிக்கா, லெபனான், பிரான்ஸ் நாடுகளைச் சோ்ந்த இசை மற்றும் நடனக் குழுவினரும் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனா். ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போா்ச்சுக்கீஸ், ஸ்பானிஷ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அத்துடன், கோவையைத் தவிா்த்து மதுரை, திருச்சி, சேலம், வேலூா், நாகா்கோவில் உள்பட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் பொது இடங்களில் அகண்ட திரைகளில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...