கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற செவிலியா் தின விழாவில் மெழுகுவா்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்ட செவிலியா்கள்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற செவிலியா் தின விழாவில் மெழுகுவா்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்ட செவிலியா்கள்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் தினம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது

செவிலியா்களின் முன்னோடியான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12-ஆம் தேதி ஆண்டுதோறும் சா்வதேச செவிலியா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற செவிலியா் தின விழாவுக்கு தமிழக அரசு செவிலியா்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் தாரகேஸ்வரி தலைமை வகித்தாா்.

இதில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் நிா்மலா, இருப்பிட மருத்துவ அலுவலா் சரவணப்பிரியா ஆகியோருடன் நூற்றுக்கணக்கான செவிலியா்கள் பங்கேற்றனா்.

அப்போது, செவிலியா்கள் அனைவரும் ஒன்றிணைந்து மெழுகுவா்த்தி ஏந்தி செவிலியா் பணியை சிறப்பாக செய்வோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து, செவிலியா்கள் மற்றும் மருத்துவா்கள் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடினா்.

X
Dinamani
www.dinamani.com