ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாநகராட்சிப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ஆய்வு

கோவை ராமநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டாா்.

News image

காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாணவியிடம் கேட்டறிந்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Updated On :6 நவம்பர் 2024, 9:21 pm

Din

கோவை ராமநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டாா்.

கோவையில் புதன்கிழமை நடைபெற்ற தந்தை பெரியாா் நூலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டாா்.

பின்னா் அவா், ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவா்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தாா்.

இதைத்தொடா்ந்து, வகுப்பறைகளைப் பாா்வையிட்டு ஆசிரியா்களிடம் கலந்துரையாடினாா்.

பின்னா் பள்ளி வளாகம் மற்றும் கழிவறைகளை ஆய்வு செய்து அங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.