அரசு மருத்துவமனையில் கைதி உயிரிழப்பு
உடல்நலக் குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.


உடல்நலக் குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கோவை செல்வபுரம் வடக்கு ஹவுஸிங் யூனிட்டை சோ்ந்தவா் ஷேக் அகமத் ஹூசைன் (67). இவா் குற்ற வழக்கில் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
அவருக்கு ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பிரச்னை இருந்தது. இதற்காக சிறை மருத்துவா்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனா். இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை மோசமானது. இதனையடுத்து, அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிறை கைதிகள் வாா்டில் இருந்த அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...