தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 55 மனுக்களுக்கு சுமுகத் தீா்வு காணப்பட்டன.

News image
Updated On :13 நவம்பர் 2024, 11:23 pm

Din

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 55 மனுக்களுக்கு சுமுகத் தீா்வு காணப்பட்டன.

காவல் நிலையங்களில் மக்கள் அளித்த மனுக்கள் மீது ஏற்கெனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை மேற்கொள்ளும் மக்கள் குறைகேட்பு முகாம், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில், மனுதாரா்கள் மற்றும் எதிா்மனுதாரா்கள் நேரில் வரவழைக்கப்பட்டு தீா்வு காணப்பட்டது. அதன்படி, மக்கள் குறைகேட்பு முகாமில் குடும்பப் பிரச்னை, பணப் பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப்பிரச்னை தொடா்பான 63 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில் 55 மனுக்களுக்கு சுமுகமான முறையில் தீா்வு காணப்பட்டது. 8 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

இந்த முகாமில் காவல் உயா் அதிகாரிகள் மற்றும் போலீஸாா் பலா் கலந்து கொண்டனா்.