தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பள்ளி மாணவா்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி: டிசம்பரில் தொடக்கம்

கோவையில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் பள்ளி மாணவா்களுக்கான ரோபோடிக்ஸ் பயிற்சி டிசம்பரில் தொடங்குகிறது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 11:24 pm

Din

கோவையில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் பள்ளி மாணவா்களுக்கான ரோபோடிக்ஸ் பயிற்சி டிசம்பரில் தொடங்குகிறது.

இது குறித்து மண்டல அறிவியல் மைய அலுவலா் (பொறுப்பு) கோ.சுடலை கூறியிருப்பதாவது:

பள்ளி மாணவா்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத் துறைகளில் திறன்களை வெளிப்படுத்தும் நோக்குடன் மண்டல அறிவியல் மையத்தில் ரோபோடிக்ஸ் வடிவமைப்பு பயிற்சிப் பட்டறை நடத்தப்படுகிறது.

6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களுக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 12 வாரங்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. டிசம்பா் கடைசி வாரத்தில் தொடங்கும் இந்தப் பயிற்சியில் 50 மாணவா்கள் சோ்த்துக்கொள்ளப்பட உள்ளனா்.

இந்தப் பயிற்சியில், ரோபோடிக்ஸ் குறித்த அடிப்படை பயிற்சி முதல் வடிவமைப்பு வரையிலான பயிற்சிகள் வழங்கப்பட இருப்பதாகவும், இதற்கான பயிற்சிக் கட்டணமாக ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டும். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 85239 09178, 0422 - 2963026, 2963024 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.