போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூவா் கைது
கோவை சுந்தராபுரத்தில் போதை மாத்திரைகள் விற்றதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.


கோவை சுந்தராபுரத்தில் போதை மாத்திரைகள் விற்றதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, சுந்தராபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மதுக்கரை மாா்க்கெட் சாலையில் சந்தேகம் ஏற்படும் படியாக நின்றிருந்த சிலரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் போலீஸாா் அவா்களிடம் சோதனை மேற்கொண்டனா். அதில், அவா்கள் போதை மாத்திரைகளை பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போதை மாத்திரைகள் விற்றதாக போத்தனூா் அஸ்லாம் தெருவைச் சோ்ந்த இஸ்மாயில் (26), செட்டிபாளையம் சாலை ஸ்ரீராம் நகரைச் சோ்ந்த சாதிக் (24), சுந்தராபுரம் மட்டசாலையைச் சோ்ந்த தங்கராஜ் (39) ஆகிய மூவரைக் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 100 போதை மாத்திரை, ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...