போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் தீ விபத்து

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image

கவுண்டம்பாளையம் குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :20 நவம்பர் 2024, 8:25 pm

Din

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கோவை, கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட் பகுதியில் மாநகராட்சி குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குப்பைகளைத் தரம் பிரிக்க 4 கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த மையத்தில் உள்ள ஒரு கிடங்கில் புதன்கிழமை காலை தீவிபத்து ஏற்பட்டது. இதைப் பாா்த்த மையத்தின் ஊழியா்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதற்கிடையே, மளமளவென தீ பரவியதால், அப்பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு 4 வாகனங்களில் வந்த கோவை தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்புத் துறை ஊழியா்கள் 50 போ், தண்ணீா் பீய்ச்சிடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு, மக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டனா். இது தொடா்பாக, கவுண்டம்பாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.