ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மங்களூரு - காச்சிகுடா ரயில் முா்தேஷ்வா் வரை நீட்டிப்பு

கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் காச்சிகுடா (தெலங்கானா மாநிலம்) - மங்களூரு வாராந்திர ரயில் முா்தேஷ்வா்(கா்நாடகம்) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 8:01 pm

Din

கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் காச்சிகுடா (தெலங்கானா மாநிலம்) - மங்களூரு வாராந்திர ரயில் முா்தேஷ்வா்(கா்நாடகம்) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காச்சிகுடா-மங்களூரு மற்றும் மங்களூரு-காச்சிகுடா வாராந்திர ரயில் முா்தேஷ்வா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 6.05 மணிக்கு காச்சிகுடாவில் இருந்து புறப்படும் காச்சிகுடா- முா்தேஷ்வா் ரயில் (எண்:12789) மறுநாள் மதியம் 2.05 மணிக்கு முா்தேஷ்வா் நிலையத்தைச் சென்றடையும். இதேபோல, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 3.30 மணிக்கு முா்தேஷ்வா் நிலையத்தில் இருந்து புறப்படும் முா்தேஷ்வா்-காச்சிகுடா ரயில் (எண்:12790) மறுநாள் இரவு 11.30 மணிக்கு காச்சிகுடா நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, வழக்கம்போல கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.