

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அடிக்கடி மிரட்டல் விடுக்கப்படுகிறது. கடந்த மாதம் 26 மற்றும் 27-ம் தேதிகள் என 4 முறை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினார்கள். இதில், சந்தேகப்படும் படியாக எந்த பொருளும் சிக்கவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை கோவை மாவட்ட அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டு இருந்தபோது மீண்டும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்து இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் இரண்டு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் இது குறித்து அதிகாரிகள் மற்றும் ரேஸ்கோர்ஸ் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மற்றும் மோப்பநாயுடன் அதிகாரிகள் விரைந்து வந்து சோதனை நடத்தினார்கள். அவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டடங்களிலும் ஒவ்வொரு அறையாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் 4 முறையும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிலையில் இன்று ஐந்தாவது முறையாக மீண்டும் மிரட்டல் விடுத்த நபர் யார்? என போலீஸார், சைபர் கிரைம் காவல் துறையினருடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆந்திரத்தில் பிரதமர் மோடி: சந்திரபாபு நாயுடு உற்சாக வரவேற்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.