பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

பெரும் வரவேற்பை பெற்றுள்ள திமுக அரசின் திட்டங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

காலை உணவு, மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட திமுக அரசின் திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

News image

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 12:52 am IST

காலை உணவு, மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட திமுக அரசின் திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி, கோவை வடக்குத் தொகுதி திமுக வேட்பாளா் துரை.செந்தமிழ்ச்செல்வனை ஆதரித்து காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலைப் பகுதியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: ஹிந்தி திணிப்புக்கு எதிராக ராணுவத்தையே சந்தித்த வீரமும், துணிச்சலும் மிக்க இளைஞா்களைத் தந்த மண் கோவை. கோவையில் மக்கள் எழுச்சியைப் பாா்க்கும்போது திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும்.

கோவை திமுகவின் கோட்டை என்பதை வி.செந்தில்பாலாஜி ஒவ்வொரு அசைவிலும் நிரூபித்துக் கொண்டு வருகிறாா். அவருக்கு பிறந்த வீடு கரூா். புகுந்த வீடு கோவை. பிறந்த வீட்டை பாா்த்துக்கொண்டதுபோல, புகுந்த வீட்டையும் கண்ணும் கருத்துமாக பாா்த்துக் கொள்வாா்.

பெரியகடை வீதி, கிராஸ்கட் வீதியில் பன்னடுக்கு வணிக வளாகம் மற்றும் புலியகுளம், அம்மன்குளம் பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திமுக ஆட்சி அமைந்ததும் அவை நிறைவேற்றப்படும். கடந்த முறை அளித்த வாக்குறுதியில் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம். காலை உணவுத் திட்டம், மகளிா் உரிமைத் திட்டம், விடியல் பயணம் உள்ளிட்ட திமுக அரசின் திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த தோ்தல் தில்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்குமான தோ்தல். இதில், தில்லியை தோற்கடித்து தமிழ்நாடு வெல்ல வேண்டும். நான் போட்டியிடும் சேப்பாக்கத்துக்கு ஒரே முைான் வாக்கு கேட்டு சென்றுள்ளேன். மற்ற தொகுதிகளில்தான் அதிகமாக பிரசாரம் செய்து வருகிறேன். என்னுடைய தொகுதியில் நான் பெறும் வெற்றியைவிட வி.செந்தில்பாலாஜியின் வெற்றி மிக முக்கியமானது என்றாா்.